கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு வாலிபருக்குக் கொடூரக் கத்திக் குத்து; தஞ்சாவூர் ‘கஞ்சா’ கும்பல் 4 பேர் கைது !!!
இட்லி கடையில் மதுபோதையில் வெடித்த பயங்கர மோதல்: நள்ளிரவில் ரயில்வே ஸ்டேஷன் அருகே அதிரடியாகச் சுற்றி வளைத்த போலீஸ் !!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று இரவு நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இட்லி கடையில் மக்கள் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது சிலர் மது போதையில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கடுமையான மோதலாக மாறியது.
இந்த மோதலில் விஷ்வேஷ் என்ற இளைஞர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்திற்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரில் பாண்டியராஜன், விஷ்ணுசேரன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தகராறு ஏற்பட்ட காரணம் மற்றும் இதில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இப்படியான சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: