கோவை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகை - பணம் கொள்ளை - பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கிய வாலிபர் !!!
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவ்ர் திருஞானசம்பந்தம் . இவரது மகன் ஜெகதீஷ்.
ஜெகதீஷ்வீட்டில் கீழ் பகுதியில் தாயார் வசித்து வருகிறார். வீட்டின் மேல் பகுதியில் ஜெகதீசுன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஜெகதீசன் தாய் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் சென்று இருந்தார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து இரவு 11 மணி அளவில் தூங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு ஜெகதீசன் வீட்டு கதவு உடைக்கும் சத்தம் கேட்டு உள்ளது.
இதனால் ஜெகதீஷ் தூக்கத்தில் இருந்து எழுந்து கீழே சென்று பார்த்தார். தாய் தங்கி இருந்த வீட்டில் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கே இருந்த நகைகள் சில்வர் பொருட்கள் மற்றும் பணம் ரூ 3 ஆயிரத்து எடுத்துக் கொண்டு அங்கு இருந்து தப்ப முயன்றனர்.
உடனடியாக ஜெகதீஷ், மற்றும் அவரது குடும்பத்தினர் பக்கத்து வீட்டுக்காரர்களை உதவிக்கு செல்போனில் அழைத்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதனால் அதிர்ச்சடைந்த கொள்ளையர்கள் ஜெகதீஷ் வீட்டுக்குள் இருந்து தப்பி செல்ல முயன்றனர்.
ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து ஓட, அதில் வாலிபர் மட்டும் சிக்கினார். இது குறித்து ஜெகதீஷ் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த குனியமுத்தூர் போலீசார் பொதுமக்கள் சிக்கிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பிடிபட்ட வாலிபர் திருப்பூர் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்: