ஞாயிறு, 17 மே, 2026

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்பு எவ்வளவு ? கணக்கெடுக்கும் அதிகாரிகள் !!!

SHARE

 கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இருப்பு எவ்வளவு ? கணக்கெடுக்கும் அதிகாரிகள் !!!

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்கள் இருப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் 254 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வந்தன. புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு தமிழக முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளும் அதில் கோவை மாவட்டத்தில் 69 கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல் நாளில் நான்கு டாஸ்மாக் கடைகளும், இரண்டாம் நாளில் பத்து டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்ட நிலையில், நேற்று மீதமுள்ள 55 டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்டன. 

இந்நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து டாஸ்மார்க் அதிகாரிகள் கூறும்போது;

கோவை மாவட்டத்தில் நிர்வாகம் வசதிக்காக கோவை வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாக டாஸ்மார்க் பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவை வடக்கில் 156 கடைகளும், தெற்கில் 128 கடைகளும் என மொத்தம் 254 கடைகள் செயல்பட்டன. இதில் வடக்கில் 48 கடைகளும், தெற்கில் 21 கடைகளும் மூடப்பட்டதை தொடர்ந்து இனி மாவட்டத்தில் மொத்தம் 215 கடைகள் மட்டுமே செயல்படும் மேலும் மூடப்பட்ட கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த 50 பார்களும் மூடப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் மூடப்பட்ட 69 கடைகளிலும் விற்பனை செய்யப்படாமல், பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் இருப்பில் உள்ளன. இந்த மதுபானங்களை கணக்கெடுக்கும் பணியில் ஒரு கடைக்கு இரண்டு பேர் வீதம் உள்ளனர். கணக்கெடுப்பு பணி முறையாக முடிந்ததும், அந்தக் கடைகளில் உள்ள மதுபானங்கள் பீளமேடையில் உள்ள மண்டல டாஸ்மாக் மேலாளர் குடோனுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: