புதன், 20 மே, 2026

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது !!!

SHARE

 வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது !!!

செங்கல்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து உள்ளனர்.

கோடை விடுமுறையில் சிறுமி வீட்டில் இருந்த போது நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டிலும் குழந்தைகளுக்கு பாதிப்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தாய், தந்தையுடன் வசித்து வரும் அந்த சிறுமி, அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக அந்த சிறுமி வீட்டில் இருந்து உள்ளார். வீட்டில் பெற்றோர் இல்லாத சூழலை பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.

வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பெற்றோர், சிறுமியின் உடலில் இருந்த ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து விசாரித்தனர். அப்போது, தன்னிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என சிறுமி கூறியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த இளைஞர் மீது கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது இந்தச் சம்பவம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால் உடனடியாக 1098 என்ற குழந்தை உதவி மைய எண்ணில் புகார் அளிக்கலாம். பெற்றோர் இல்லாத நேரத்தில் யாராவது வீட்டுக்கு வந்தால், அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித் தர வேண்டும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுச் செல்வதை தவிர்த்து, நம்பிக்கையானவர்களின் கண்காணிப்பில் விடுவதே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஒரே வழியாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: