செவ்வாய், 19 மே, 2026

போதைப் பழக்கத்தை ஒழிக்க மாணவர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த அறிவுரை !!!

SHARE

 போதைப் பழக்கத்தை ஒழிக்க மாணவர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த அறிவுரை !!!

போதைப் பழக்கத்தை ஒழிக்க பள்ளிக் காலத்தில் இருந்தே மாணவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு அரங்கத்தில் பொதுப் பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு மேற்கொள்வதற்கு முன் தன்னை சந்திக்க வந்தவர்களிடம், தான் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் என்றும், தன்னை பார்க்க வரும்போது சால்வை கொண்டு வரக் கூடாது, பந்துகளை கொண்டு வாருங்கள் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், "முதலமைச்சரின் வழிகாட்டுதல் பெயரில் விளையாட்டு துறை அமைச்சர் என்பதைவிட இதே இடத்தில் ஒரு ஹாஸ்டல் மாணவராக இருந்த விளையாட்டு வீரர்தான் நான். இந்த இடம் என் வீடு போன்றது.

இங்கு உள்ள கட்டுமான பணிகள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தோம்.

கல்வித் துறை போல் விளையாட்டுத் துறையும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய துறை. தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில் விளையாட்டு அவசியம். குறிப்பாக , பிரேசிலில் போதைப் பழக்கம் அதிகமாக இருந்த போது அந்நாட்டு அரசு விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அந்த நாடு விளையாட்டில் முதலிடம் பெற்றது.

பள்ளிக் காலத்தில் இருந்தே மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் கவனம் செலுத்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

நம் விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டிகள் குறித்து சரியான புரிதல் இல்லை. நம் மாணவர்களின் கவனம், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரை தான் உள்ளது. பத்து வயதிலேயே ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் அளவிற்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்குறிய செயல் திட்டம் உருவாக்கப்ப வேண்டும். போதைப் பழக்கத்தை ஒழிக்க, பள்ளிக் காலத்தில் இருந்தே விளையாட்டில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிக்க முயற்சிகள் எடுத்து உள்ளோம். அனைவரும் விளையாட வேண்டும். தமிழகம் ஆரோக்கியமான மாநிலமாக மாற வேண்டும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். உத்தரகாண்ட் போல சிறிய மாநிலங்கள் கூட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றன. தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மத்திய அரசுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு தமிழ்நாட்டில் நிச்சயமாக நடத்துவோம்.

அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுக்கான கட்டமைப்புகளை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 25 ஆயிரம் அல்லது 35 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு விளையாட்டு அரங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: