செவ்வாய், 26 மே, 2026

தோழியுடன் இருந்த புகைப்படத்தை அனுப்பிய விவகாரம் ; டிப்பர் லாரி உரிமையாளருக்கு கத்தி குத்து - வாலிபர் கைது !!!

SHARE

 தோழியுடன் இருந்த புகைப்படத்தை அனுப்பிய விவகாரம் ; டிப்பர் லாரி உரிமையாளருக்கு கத்தி குத்து - வாலிபர் கைது !!!

கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் ( வயது 25) இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வருகிறார். 

பேரூர் பச்சப்பாளையத்தை சேர்ந்தவர் உமர் முக்தார் ( வயது 23) இவரது உறவினர் வீடு கோகுல் வீடு அருகே உள்ளது. 

இந்த நிலையில் உமர் முக்தார் அவர் தோழியுடன் இருந்த போது கோகுலின் நண்பர் இருவரையும் புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று உமர் முக்தார் சுகுணாபுரம் உறவினர் வீட்டுக்கு சென்ற போது கோகுல் அவரது வீட்டின் அருகில் நின்று உள்ளார். அப்போது கோகுளிடம் அந்த நண்பரின் பெயரை கூறி அவர் தோழியுடன் இருந்த புகைப்படத்தை மற்றவர்களுக்கு அனுப்பியது ஏன் ? என்பது குறித்து கேட்டு உள்ளார். 

அப்போது கோகுல் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோகுலை, உமர் முக்தார் கத்தியால் குத்தி உள்ளார். 

இதனால் அலறிய கோகுலின் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டனர். பிறகு அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். 

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உமர் முக்தார் கைது செய்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: