சனி, 30 மே, 2026

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !!!

SHARE

 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !!!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தது முதல் நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். இதுவரை 100- க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக இன்றும் (மே 30) தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையில், ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த கிர்லோஷ் குமார், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த ஷரண்யா ஆரி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மிருணாளினி, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (ஆவின்) இணை நிர்வாக இயக்குநராக இருந்த கவிதா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சித்ரா விஜயன், சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பொதுத்துறை (நெறிமுறை) துணைச் செயலாளராக இருந்த வீர் பிரதாப் சிங், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் செயல் இயக்குநராக இருந்த கவுரவ் குமார், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக இருந்த கட்டா ரவி தேஜா, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: