கோவை, அன்னூர் பகுதியில் சுமார் 1,453 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் - கோவை மாவட்ட காவல்துறையினர்...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அன்னூர் காவல் நிலைய காவல் துறையினர் கருமத்தம்பட்டி to அன்னூர் சாலை அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்து இருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்ராஜ் (44), ரமேஷ் குமார் (43)* மற்றும் மாதேஸ்வரன் (42) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்டசுமார் 1453 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

0 கருத்துகள்: