வெள்ளி, 26 ஜூன், 2026

கோவை 21.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; வடமாநில 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது - மாவட்ட காவல்துறை நடவடிக்கை !!!

SHARE

 கோவை 21.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; வடமாநில 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது - மாவட்ட காவல்துறை நடவடிக்கை !!!

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் இருசக்கர வாகன நிறுத்தம் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபிதீன நாயக் (20), மர்னதா நாக் (28) மற்றும் ரிங்கி டிகால் (26) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: