கோவையில் 2.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் ; திண்டுக்கல் வாலிபர் கைது, தப்பியோடிய மற்றொரு ஆசாமிக்கு போலீஸார் வலைவீச்சு - மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை ...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று (15.06.2026) மதுக்கரை காவல் நிலைய காவல் துறையினர் குற்ற சம்பவம் நடக்காமல் கண்காணிக்க வேண்டி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது, கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ராஜ் விஜய் நகர் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

0 கருத்துகள்: