ஞாயிறு, 28 ஜூன், 2026

2 கி.மீ தூரத்து ட்ரோன் ஸ்பீக்கரில் போலீஸ் எச்சரிக்கை ; அலறி அடித்து ஓட்டம் பிடித்த டாஸ்மாக் மதுப்பிரியர்கள் - கோவையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் அதிரடி நடவடிக்கை !!!

SHARE

 2 கி.மீ தூரத்து ட்ரோன் ஸ்பீக்கரில் போலீஸ் எச்சரிக்கை ; அலறி அடித்து ஓட்டம் பிடித்த டாஸ்மாக் மதுப்பிரியர்கள் - கோவையில் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் அதிரடி நடவடிக்கை !!!

“5 கி.மீ பாய்ந்து செல்லும் அதிநவீன ட்ரோன்” மூலம் கண்காணிப்பு !!!

குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், மறைவான இடங்களில் போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கண்டறியவும் ட்ரோன் மூலம் கண்காணித்த கோவை பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் பொது இடங்கள் மற்றும் டாஸ்மாக் பார்களுக்கு வெளியே நின்று மது அருந்திய நபர்களை 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து டிரோனில் இருந்த வாக்கி டாக்கி ஸ்பீக்கர் மூலர் எச்சரித்ததும் மதுப்பிரியர்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் குறித்து பார்ப்போம். 

கோவை, பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், மறைவான இடங்களில் போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஏற்பாட்டில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் ஒரு இடத்தில் இருந்தே ட்ரோன் மூலம் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் பகுதிகளாக சில பகுதிகள் கண்டறியப்பட்டு டிரோன்களை ஏவி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பெரியநாயக்கன் பாளையம் வளம் மீட்பு பூங்கா, ஹவுசிங் யூனிட், சாமநாயக்கன்பாளையம், ஜே.ஜே.நகர் மலை அடிவார பகுதிகள் மற்றும் கோட்டைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று போலீசார் ட்ரோன் கேமரா மூலம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 

அப்போது பெரியநாயக்கன்பாளையம் அருகே கோட்டைப் பிரிவு பகுதியில் டாஸ்மாக் கடை முன்பாக பொது இடங்களில் மது அருந்திய நபர்களை ட்ரோன் கேமராவில் பொருத்தப்பட்டு இருந்த வாக்கி டாக்கி ஸ்பீக்கர் மூலம் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தவாறு கண்காணித்து எச்சரித்தார். அதை கேட்டததும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மதுப்பிரியர்கள் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை அழைத்து போதிய அறிவுறுத்தல்களை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி கூறுகையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் முதன்முறையாக கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட அளவில் ட்ரோன் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் குற்றச்சம்பவங்கள் நிகழும் பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள இடங்களை கண்காணிக்க இருக்கும் இடத்திலிருந்து 5 கிமீ சுற்றளவிற்கு செல்லும் அதிநவீன ட்ரோன் கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்பீக்கர் வசதியும் இணைக்கப்பட்டு உள்ளது. 

இதனால் குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழும் பட்சத்தில் உடனடியாக செல்ல ட்ரோன் கேமரா பேருதவியாக இருக்கும். அதேபோல் போலீசார் மற்றும் அவர்களது வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் தடைகளை கண்டறிந்து அதனை தவிர்த்து சம்பவ பகுதிக்கு செல்லும் வகையிலான நவீன ட்ரோன்களும் இந்த கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் தவிர்க்கப்படும். காவல் துறையினரின் இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: