வெள்ளி, 19 ஜூன், 2026

கோவையில் சாதிப் பாட்டு தகராறு : 4 பேரை வெட்டிச் சாய்த்த கொடூரம் – 2 பேருக்கு தலா ‘8 ஆயுள் தண்டனை’ விதித்து எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு !!!

SHARE

 கோவையில் சாதிப் பாட்டு தகராறு : 4 பேரை வெட்டிச் சாய்த்த கொடூரம் – 2 பேருக்கு தலா ‘8 ஆயுள் தண்டனை’ விதித்து எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு !!!

9 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பின் மாபெரும் திருப்புமுனை; தண்டனைகளை ‘ஏக காலத்தில்’ அனுபவிக்க நீதிபதி விவேகானந்தன் அதிரடி உத்தரவு!

கோவை அருகே பாட்டு சத்தத்தை குறைத்து வைக்க சொன்னதற்காக நான்கு பேரை அருவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற இரண்டு பேருக்கு 8 ஆயுள் தண்டணை விதித்த கோவை நீதிமன்றம் தண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு  அருகே சிவா சிக்கன் என்ற கோழி பண்ணை ஒன்றில் தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அதே கோழி பண்ணையில் உயர் சாதியை சில குடும்பத்தினரும் தங்கி இருந்த நிலையில், அவர்கள் சாதி பாடலை ஒலிபரப்பி வந்துள்ளனர். இந்நிலையில் தாழ்த்தப்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சடையாண்டி,  காளிமுத்து,கருப்பு, சுந்தர்ராஜன் ஆகிய நான்கு பேரை சாதி பெயர் சொல்லி திட்டியதுடன், உயர் சமூக பிரிவை சேர்ந்த  செந்தில்குமார், சின்னதுரை ஆகியோர் அருவாளால்  வெட்டினர். இதில் சடையாண்டி,  காளிமுத்து,கருப்பு, சுந்தர்ராஜன்  ஆகிய  நான்கு பேரும் படுகாயம் அடைந்த நிலையில், இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் SC,ST சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 2017 ம் ஆண்டு நடந்த  இந்த கொலை முயற்சி வழக்கு 9 ஆண்டுகளாக  கோவை எஸ்சி எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில்  இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட செந்தில்குமார், சின்னதுரை ஆகிய  இரண்டு பேருக்கும் கொலை முயற்சி, SC,ST வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில்  தலா எட்டு ஆயுள் தண்டனை விதித்து கோவை SC,ST சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: