புதன், 17 ஜூன், 2026

66 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு ; தந்தை,மகன் உட்பட மூன்று பேருக்கு சிறை தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

SHARE

 66 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு ; தந்தை,மகன் உட்பட மூன்று பேருக்கு சிறை தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் போதை பொருள் தடுப்பு போலீசார் கடந்து 2023 ஆம் ஆண்டு ஏரகாம்பட்டி பகுதியில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது காரில் இருந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த தமிழ்ச்செல்வன் பிடிபட்டார். அவர் கொடுத்த தகவலின் பெயரில் தமிழ்ச்செல்வனின் தந்தையும் லாரி ஓட்டுனருமான சேகர் பிடிபட்டார். அவரது லாரியில் இருந்து ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ரஞ்சித் குமார் என்பவர் பல்லடம் அருகே பிடிபட்டார். இவரது மோட்டார் சைக்கிளில் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போதைப்பொருள் ஒழிப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றம் சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். சேகருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 30,000 அபராதமும், ரஞ்சித் குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 60,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜராகி வாதாடினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: