திங்கள், 22 ஜூன், 2026

டெல்லியில் கைவரிசை காட்டிய குஜராத் திருடன் : ரூ. 80 லட்சம் தங்கக் கட்டியோடு கோவையில் இருந்தும் ‘எஸ்கேப்’ !!!

SHARE

 டெல்லியில் கைவரிசை காட்டிய குஜராத் திருடன் : ரூ. 80 லட்சம் தங்கக் கட்டியோடு கோவையில் இருந்தும் ‘எஸ்கேப்’ !!!

நக்பூர், மும்பை, சூரத் போலீசாருக்கும் டிமிக்கி கொடுத்த மோசடி மன்னன் ; கடையை காலி செய்து விட்டு ஓட்டம் !!!

டெல்லியைச் சேர்ந்த பிரபல மொத்த தங்க வியாபாரியிடம் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள தங்கக் கட்டிகளை நூதன முறையில் ஏமாற்றி விட்டு, பல மாநில போலீசாருக்கு குற்றவாளியாக டிமிக்கி கொடுத்து வந்த 50 வயது மோசடி ஆசாமியை, தானே நகரின் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

குஜராத் மாநிலம், மெஹ்சானா பகுதியைச் சேர்ந்த விஜய் அம்பாலால் சோனி (வயது 50) என்ற இந்த கொள்ளையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியின் பரபரப்பான பகுதியில் ஒரு சிறிய ஜூவல்லரி கடையை வாடகைக்கு எடுத்து ‘செட்’ செய்து உள்ளார்.

கடந்த 2019 அக்டோபர் 23 அன்று, கரோல் பாக்கில் உள்ள மொத்த தங்க வியாபாரியான கிருஷ்ணதேவ் குப்கர் என்பவரை அணுகிய விஜய் சோனி, தனக்கு அர்ஜென்ட்டாக 2 கிலோ எடை உள்ள பிரம்மாண்ட தங்கக் கட்டி (Gold Bar) வேண்டும் என ஆர்டர் கொடுத்து உள்ளார். 

வியாபாரியும் சோனியின் பேச்சை நம்பி, 2 கிலோ தங்கக் கட்டியை அவரது கடையில் வந்து டெலிவரி செய்து உள்ளார். தங்கக் கட்டியைக் கையில் வாங்கிய விஜய் சோனி, பணத்தை உடனடியாக கிருஷ்ணதேவின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைனில் ‘டிரான்ஸ்ஃபர்’ செய்து விட்டு வருவதாகக் கூறி, கடையை விட்டு வெளியேறி உள்ளார்.

ஆனால், பல மணி நேரம் கழிந்தும் விஜய் சோனி கடைக்குத் திரும்பவில்லை; அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆஃப்’ என வந்தது. அதிர்ச்சி அடைந்த மொத்த வியாபாரி கிருஷ்ணதேவ் குப்கர், தான் 80 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள தங்கக் கட்டியை பறிகொடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, டெல்லி கரோல் பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது ஒருபுறமிருக்க, தலைமறைவாக இருந்த சோனி தானே நகருக்கு வரவிருக்கும் ரகசிய கிருஷ்ணதேவுக்குத் தெரியவர, அவர் உடனடியாக தானே போலீசாரின் ஆன்டி-எக்ஸ்டார்ஷன் செல் பிரிவை அணுகி உதவி கேட்டு உள்ளார்.

இதை அடுத்து, தானே ஏஇசி (AEC) போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கோத்மிரே தலைமையிலான தனிப்படை போலீசார், தலாப் பாலி பகுதியில் பதுங்கி இருந்து, அங்கு வந்த விஜய் சோனியை கைது செய்து, மோசடி வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர். 

இதுகுறித்து க்ரைம் பிரிவு ஏ.சி.பி (ACP) என்.டி.கடம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"கைதான விஜய் சோனியின் ஸ்டைலே விசித்திரமானது. ஏதாவது ஒரு பெருநகரத்திற்குச் சென்று சிறிய நகைக்கடை ஒன்றை ஆரம்பிப்பார்; அங்கு உள்ள மொத்த வியாபாரிகளை ‘டார்கெட்’ செய்து பழகி, முதலில் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவார். பின்னர், ஒரு கட்டத்தில் பெரிய அளவில் தங்கத்திற்கு ஆர்டர் கொடுத்து, டெலிவரி எடுத்த அடுத்த நொடி மொத்தமாக கடையை காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்" எனத் தெரிவித்தார்.

போலீசாரின் விசாரணையில் வெளி வந்து உள்ள பின்னணி விபரங்களின்படி, 

கைதான விஜய் சோனி நக்பூர் கணேஷ்பத் காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் மும்பை கிளையில் இருந்து 25.11 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் அள்ளிய சைபர் க்ரைம் வழக்கிலும், மும்பையின் எல்.டி.மார்க் காவல் நிலையத்தில் பதிவான மற்றொரு மாபெரும் மோசடி வழக்கிலும் தேடப்பட்டு வந்த ‘மோஸ்ட் வாண்டட்’ கிரிமினல் என்பது அம்பலமானது. 

மேலும், கடந்த 2013-இல் பால்தார் மாவட்டம் போய்சார் போலீசாரால் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ‘கம்பி’யெண்ணி சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதும், குஜராத் மாநிலம் சூரத் வரச்சா போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது தான் ஜாமீனில் (Bail) வெளியே வந்து மீண்டும் டெல்லியில் கைவரிசை காட்டி உள்ளார் என்பதும் தெரியவந்து உள்ளது. 

தற்பொழுது கைது செய்யப்பட்டு உள்ள இந்த திருடனை டெல்லி கரோல் பாக் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ள தானே போலீசார், இந்த மோசடிகளில் சோனியோடு கூட்டாளிகளாகச் செயல்பட்ட அவரது சொந்த சகோதரர்களையும் தேடி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: