ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு !!!
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாக வசதிகளுக்காக ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி, பல்வேறு துறைகளை சேர்ந்த 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்து உள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் விவரம்:
சுன்சோனுகம் ஜடக் செரு பொதுப் பணிகள் துறை முதன்மைச் செயலர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலராகவும், ஆர்.செல்வராஜ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் பொதுப் பணிகள் துறை முதன்மைச் செயலராகவும், சந்தீப் நந்தூரி தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சிறப்பு செயலர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராகவும், பி.உமா மகேஸ்வரி மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் கைத்தறி துறை இயக்குநராகவும், ஆர். அழகுமீனா சுகாதாரத் துறை துணை செயலர் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவராகவும், ஆர். சுரேஷ் குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழிலக வாரியத்தின் தலைமை செயஸ் அதிகாரியாகவும், சித்ரா விஜயன் சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையர் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

0 கருத்துகள்: