கோவை சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல் !!!
கோவை சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கோவை மத்திய சிறையில் 2,500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தண்டனை பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் என்று தனித்தனியான பிளாக்குகளில் உள்ளது.
இந்நிலையில் 29 வது பிளாக் பகுதியில் கைதிகள் ஆனந்த், ஜெயமணி உட்பட 3 கைதிகள் நேற்று நின்று கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு கைதி வழக்கறிஞர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
உடனே மூன்று கைதிகளும் அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை ஒட்டு கேட்பது போல் நெருங்கி நின்று கவனித்துக் கொண்டு இருந்தனர். அதை பார்த்த காவலர் மூன்று கைதிகளையும் விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
உடனே அந்தக் காவலரை ஜெயமணி, ஆனந்த் உள்ளிட்டவர்கள் மரியாதை குறைவாக பேசி திட்டியதாக தெரிகிறது. இது பற்றி அந்த காவலர் சிறை கண்காணிப்பாளர் தாமரைக்கணியிடம் புகார் செய்தார். அதன் பேரில் அவர் வந்து விசாரணை நடத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மூன்று கைதிகளும் சேர்ந்து நேற்று சிறை காவலர் வெள்ளை பாண்டியை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக மற்ற காவலர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். அவரை தாக்கிய கைதிகளை அப்புறப்படுத்தினார்கள், காயம் அடைந்த சிறை காவலர் வெள்ளை பாண்டி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கோவை மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் மூன்று கைதிகள் மீது புகார் செய்யப்பட்டு உள்ளது. அதன் பெயரில் அந்த மூன்று கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் மூன்று பேரையும் வேறு சிலைக்கு மாற்றவும் சிறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான கைதியை சரமாரியாக கைதிகள் தாக்கினார்கள். அதற்கு முன்பு ஒரு காவலரை தகரத்தை வைத்து தாக்கிய சம்பவமும் நடைபெற்று உள்ளது. தற்பொழுது சிறை காவலர்கள் தாக்கப்பட்டது மூன்றாவது சம்பவம், ஆகும் கோவை சிறையில் கைதிகள் தாக்குதலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

0 கருத்துகள்: