சனி, 13 ஜூன், 2026

சூலூரில் கடத்தி கொலையான சிறுமி பலாத்கார வழக்கு விசாரணை ; 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - கோவை போக்சோ நீதிமன்றம் !!!

SHARE

சூலூரில் கடத்தி கொலையான சிறுமி பலாத்கார வழக்கு விசாரணை ; 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - கோவை போக்சோ நீதிமன்றம் !!!

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் சேர்ந்த 10 வயது சிறுமி. கடந்த மாதம் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கார்த்திக் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் இரண்டு பேரும் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக சூலூர் போலீசார் 819 பக்க குற்றப்பத்திரிக்கை கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் நகல் கைதான இரண்டு பேரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர்கள் இரண்டு பேரும் கோவை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்பொழுது கைதிகள் தரப்பில் குற்றப் பத்திரிகை நகலை படிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 15 ஆம் தேதி திங்கட்கிழமை ஒத்திவைத்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கைதானவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள் விசாரணை நடைபெற உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: