போதையில் போக்குவரத்து பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி கைது !!!
கோவை, போத்தனூர் போக்குவரத்துப் பிரிவில் பெண் காவலராகப் பணி புரிந்து வருபவர் பொன்னுதாய் (வயது 34). இவர் நேற்று சுந்தராபுரம் - பொள்ளாச்சி ரோடு, காந்தி நகர் சந்திப்பில் வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த வழியே போதையில் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர், போக்குவரத்துப் பணியில் இருந்த பெண் காவலர் பொன்னுதாயிடம் சென்று தகராறு செய்தார். சாலையில் நின்று கொண்டு வாகனங்களை ஒழுங்குபடுத்தியவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கைகளை நீட்டி அடிக்கப் பாய்ந்தார். மேலும் அவமரியாதையாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பொன்னுதாய் அளித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண் போலீசிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த போதை ஆசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: