வியாழன், 25 ஜூன், 2026

சூலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு ; கோவை போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர், சாட்சிகளிடம் விசாரணை !!!

SHARE

 சூலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு ; கோவை போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர், சாட்சிகளிடம் விசாரணை !!!

சூலூர் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது இன்ஸ்பெக்டர், சாட்சிகளிடம் ஆகியோர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

கோவை மாவட்டம், சூலுரைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மாதம் 21 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கார்த்திக் அவரது கூட்டாளி மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சம்பவம் நடைபெற்ற இடம், சிறுமியின் சொந்த ஊர், அவரது உறவினர்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, தடையவியல் ஆய்வு அறிக்கை, தொலைத்தொடர்பு சாதன உபயோகம் என பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் கைதான இரண்டு பேரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வாங்கப்பட்டது. வழக்கில் 104 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். தற்பொழுது இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் நேற்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. சிறுமியின் தந்தை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸ்காரர் ஆகிய இரண்டு பேர் நேற்று நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டு ரகசியமான முறையில் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற சாட்சிகள் விசாரணைக்கு பிறகு, வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது என்றும், சாட்சிகள் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரியான சூலூர் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து சாட்சியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி உள்ளார். சூலூர் சிறுமி பலாத்கார வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: