பொள்ளாச்சியில் த.வெ.க நிர்வாகிகளின் அலட்சியம்... 1000 பேருக்கு அன்னதானம் என ஏமாற்றிவிட்டு, தண்ணீர் பாட்டில் கொடுத்து அனுப்பி அராஜகம் !!!
பசியோடு கையேந்தி நின்ற நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள்; கண்டு கொள்ளாமல் குரூப் போட்டோ எடுத்துக் கொண்ட நிர்வாகிகள்; பொள்ளாச்சி மக்கள் கொந்தளிப்பு !!!
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரும்,ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்துக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகள் சார்பாக பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வெளியே ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் அறிவித்து இருந்தனர். இதனை அடுத்து அதற்காக கூடாரம் அமைத்து இருந்தனர். இது குறித்து அறிந்த ஏழை மக்கள் அன்னதானம் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்து இருந்தனர். தாய்மார்கள், முதியவர்கள் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் அன்னதானம் வாங்குவதற்காக காத்து இருந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தினர் உணவு கொண்டு வந்து அவர்களுக்கு வழங்கினர். அன்னதானம் கொடுக்கும் உணவை வாங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இந்நிலையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதாக சொல்லிவிட்டு, மிகக் குறைவான எண்ணிக்கையில் உணவு வழங்கி விட்டு, நீண்ட நேரம் காத்து இருந்த முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உணவு இல்லை என கூறியதால், பசியோடு நீண்ட வரிசையில் கையேந்தி காத்து இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஒருவேளை உணவுக்காக கையேந்தி நின்ற ஏழை மக்களை கண்டு கொள்ளாமல், ஏழைகள் கையேந்தி நிற்கும் அதே வேலையில், மகிழ்ச்சியாக கழக நிர்வாகிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் காத்து இருந்த பொதுமக்களுக்கு 300 ml தண்ணீர் பாட்டில்களை மட்டுமே கொடுத்து அனுப்பினர். மேலும் உணவு கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உடனே அந்த இடத்தை காலி செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் சென்று விட்டனர்.

0 கருத்துகள்: