சனி, 18 ஜூலை, 2026

டிஜிட்டல் லஞ்ச... கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ : கூகுள் பே மூலம் ₹7.5 லட்சம் சுருட்டிய துணை தாசில்தார் உட்பட 5 பேர் சிக்கினர் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை !!!

SHARE

 டிஜிட்டல் லஞ்ச... கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ : கூகுள் பே மூலம் ₹7.5 லட்சம் சுருட்டிய துணை தாசில்தார் உட்பட 5 பேர் சிக்கினர் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை !!!

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார்; ₹5,000 ரொக்கமும் பறிமுதல்; விடிய, விடிய நடந்த விசாரணை !!!

தமிழ்நாடு முழுவதும் தாலுகா அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.

 கோவை, பாலசுந்தரம் சாலையில் வடக்கு தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு தாசில்தாராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கு வரும் பொது மக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் பணம் பெறப்படுவதாக புகார் எழுதன. இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென சோதனை நடத்தினார்கள். அப்பொழுது தாசில்தார் உட்பட பலரும் அலுவலகத்தில் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரும் ? வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, வெளியில் இருந்தவர்கள் யாரும் ? உள்ளே அனுமதிக்கப்படவில்லை, இதை அடுத்து அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் மேஜை, டிாயர்கள், கோப்புகள் உள்ளிட்ட இடங்களில் கணக்கில் வராத பணம் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டு உள்ள்ளதா ? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் google pay மூலமாக லஞ்சப் பணம் பெறப்பட்டு உள்ளதா ? என ஒவ்வொரு அலுவலர்களிடம் செல்போன்களை போலீசார் ஆய்வு நடத்தினர். அதில் சுமார் மூன்று ஊழியர்களின் செல்போன்களில் கூகுள் பே மூலம் சந்தேகத்துக்குரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் அந்த பணம் எதற்காக பெறப்பட்டது ? அனுப்பியவர்கள் யார் ? என்று போலீசார் விசாரித்தனர். இதை அடுத்து துணை தாசில்தார், தாலுகா இன்ஜினியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர் உட்பட ஆறு பேரின் கூகுள் பே கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரூபாய் 7 1/2 லட்சம் பணம் பெற்றது தெரிய வந்தது. தாலுகா என்ஜினியர் அதிக அளவில் பணம் பெற்றது தெரியவந்தது. இது தவிர ரூபாய் 5,000 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐந்து அதிகாரிகளிடம் விடிய, விடிய விசாரணை நடைபெற்றது.

 கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

!

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: