திங்கள், 27 ஜூலை, 2026

கோவையில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் மருத்துவர் பரிந்துரை அற்ற 250 தூக்க மாத்திரைகள் (Nitrazepam Tablets) பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்...

SHARE

 கோவையில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் மருத்துவர் பரிந்துரை அற்ற 250 தூக்க மாத்திரைகள் (Nitrazepam Tablets) பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் K. ரெட்டி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், அன்று ஆனைமலை காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆனைமலை ஆத்துப்பாலம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெரிய கருப்பு மகன் சுந்தர் (32), பாண்டி மகன் சௌந்தரபாண்டி (25) மற்றும் விஜயராஜா (26) ஆகியோர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, மருத்துவர் பரிந்துரை அற்ற நைட்ராசெபாம் (Nitrazepam) தூக்க மாத்திரைகள் -250 மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 பின்னர், அந்த 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம்-ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ, சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: