திங்கள், 27 ஜூலை, 2026

கோவையில் 21 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் ....

SHARE

 கோவையில் 21 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் ....

கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிலேய் நாயக் மகன் பாபிடினா நாயக் (20) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் பவன்குமார் K. ரெட்டி, பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

 மேற்படி உத்தரவின்படி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்து இருந்த வழக்கு குற்றவாளியான பாபிடினா நாயக் (20) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: