மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதாக மிரட்டி தாயிடம் ரூ.8.65 லட்சம் பறிப்பு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகார் !!!
ஏமாற்றிய துஷரா - கார்த்திக்
கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம், தங்களது வீட்டின் அருகே பியூட்டிஷியனாக பணியாற்றி வந்த துஷரா என்பவர் குடியேறி, அவர் தங்களது குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துஷரா தனியாக அழைத்து, தனது 17 வயது மைனர் மகளுடன் 'கார்த்திக்' என்பவர் தொடர்பில் இருப்பதாகவும், அவரிடம் தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாகவும் கூறி உள்ளார்.
மேலும், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்குவதற்காக கார்த்திக் என்பவர் ரூ.5 லட்சம் கேட்பதாக துஷரா கூறி உள்ளார். , மகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு, அவரிடம் இருந்த நகைகளை விற்றும், உறவினர்கள் மூலம் கடன் பெற்றும், கூகுள் பே மற்றும் ரொக்கமாகவும் பல்வேறு தவணைகளில் பணம் கொடுத்தது உள்ளார்.
இதன்படி, துஷரா மற்றும் அவர் காட்டியதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்திய 'கார்த்திக்' என்பவரிடம் மொத்தம் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் வரை பணம் கொடுத்து உள்ளார். பிறகு சிறிது நாள் கழித்து துஷரா பொய்யான தகவல்களை கூறி பணம் பறித்தது அந்தப் பெண்ணுக்கு தெரிய வந்தது.
பின்னர் தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கத் தொடங்கிய போதும், காவல் துறையில் புகார் அளிக்க முயன்ற போதும் துஷரா மற்றும் கார்த்திக் ஆகியோர் அந்தப் பெண்ணை மிரட்டி உள்ளனர்.
இதை தொடர்ந்து அந்தப் பெண் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளார்.
மேலும், சில அடையாளம் தெரியாத நபர்களை வைத்து தங்களது குடும்பத்தினரின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே சென்றாலோ ? அல்லது வக்கீல் மற்றும் காவல் துறையினரை சந்திக்கச் சென்றாலோ ? அந்த நபர்கள் தங்களை பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்துவதாகவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.
தங்களது குடும்பத்தினரிடம், 'இந்த விவகாரம் குறித்து வெளியே கூறினாலோ, ? காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ ? குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அழித்து விடுவோம்; உன்னையும் உன் பிள்ளைகளையும் உயிரோடு விடமாட்டோம்' என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்து உள்ளார்.
மேலும், தனது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி, அவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளுவோம் என்று மிரட்டியதாகவும், இதனால் தங்களது குடும்பத்தினர் கடும் அச்சத்துடனும், மன உளைச்சலுடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக கடந்த ஜூன் 26-ந் தேதி தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதாகவும், அப்போது புகாரை பெற மறுத்ததாகவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஜூன் 29-ந் தேதி காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆன்லைன் வழியாக புகார் அளித்ததாகவும், அதற்கு மனு ரசீது வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், இதுவரை உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், எதிரிகளின் மிரட்டல் காரணமாக தங்களது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்து உள்ளார்.
எனவே, தனது மைனர் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் இருப்பதாக கூறி மிரட்டிய துஷரா, 'கார்த்திக்' என கூறப்படும் நபர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தங்களது குடும்பத்தினருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதுடன், மிரட்டி பறிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை மீட்டுத் தரவும் மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் அளித்த, அந்த அளித்த மனுவில் தெரிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: