ரீல்ஸ் மோகம்... நடுரோட்டில் ஆபத்து” ; கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில் கார் ஜன்னலில் தொங்கியபடி திருமண ஜோடி ‘போட்டோ ஷூட்’ - ஸ்தம்பித்த டிராஃபிக் !!!
கோவை, ராமநாதபுரம் மேம்பாலத்தில், திருமணத்திற்காக இரண்டு மூன்று க்கும் மேற்பட்ட கார்கள் குடும்பத்தினர் சென்ற உள்ளனர். அதில் காரின் ஜன்னல் வழியாக வெளியே உடலை நீட்டி நின்று கொண்டு ‘போட்டோ ஷூட்’ நடத்திய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கட்டப்பட்டு உள்ள ராமநாதபுரம் - திருச்சி ரோடு மேம்பாலத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இந்நிலையில், திருமணம் முடிந்த புதுமண ஜோடி ஒன்று, தங்களது திருமணத்திற்குப் பிந்தைய ‘போட்டோ ஷூட்’ மற்றும் இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ செய்வதற்காக இந்த மேம்பாலத்தைத் சொல்லும்பொழுது போட்டோ சூட் எடுத்து உள்ளனர்.
இதற்காக மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போதே, அதன் பக்கவாட்டு ஜன்னல் கதவுகள் வழியாக உடலை வெளியே நீட்டி, ஆபத்தான முறையில் நின்றும் கொண்டு சென்று உள்ளார்.
இவர்களது இந்த ஆபத்தான சாகசப் பயணத்தாலும், போட்டோ ஷூட் வாகனங்கள் சாலையை மறித்து மெதுவாகச் சென்றதாலும், மேம்பாலத்தின் பின்னால் வந்த இதர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக, விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடுரோட்டில் அரங்கேறிய இந்த அத்துமீறலை, பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து உள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக கோவை மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

0 கருத்துகள்: