வியாழன், 9 ஜூலை, 2026

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை செய்த வழக்கு ; வீட்டு உரிமையாளர்கள் உட்பட 8 பேர் சாட்சியம் !!!

SHARE

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை செய்த வழக்கு ; வீட்டு உரிமையாளர்கள் உட்பட 8 பேர் சாட்சியம் !!!

கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி கடந்த மே மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சிறுமியின் வீட்டு அருகே குடியிருந்த கார்த்தி, உடந்தையாக இருந்த மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

104 பேர் சாட்சியமாக சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்பொழுது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 16 பேர் சாட்சியம் அளித்து இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர்கள் இரண்டு பேர் உட்பட 8 பேர் சாட்சியம் அளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: