கட்டணம் கட்டினாலும் ‘அபராத’ அராஜகம்... பாரதியார் பல்கலைக் கழகத்தின் இணையதளக் குளறுபடி ; விழிபிதுங்கி நிற்கும் தொலைதூரக் கல்வி மாணவர்கள் - உயர்கல்வித் துறைக்கு கோரிக்கை !!!
2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!
கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை, முறையாக பாடம் நடத்தாமலும் தேர்வு நடத்தாமலும், தற்போது வரை இரண்டு ஆண்டுகளில் இரண்டு பருவத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. தற்போது மூன்றாம் பருவத்தேர்வு இந்தாண்டு தொடங்கும் நிலையில், மாணவர்களை ஜூன் 25ஆம் தேதிக்குள் மூன்றாம் பருவத்தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்த நிலையில் மாணவர்கள் கடந்த ஜூன் 25ஆம் தேதிக்குள் பல்கலைக் கழக இணையதளத்தில் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் கட்டணம் மூன்றாம் பருவத் தேர்வுக்கு பதிலாக நான்காம் பருவத் தேர்வில் கட்டணம் இணையதளத்தில் பதிவாகியுள்ளதால், மூன்றாம் பருவத்திற்கு கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி ஒவ்வொரு மாணவருக்கும் தலா 300 ரூபாய் பாரதியார் பல்கலைக்கழகம் அபராதம் விதித்துள்ளது மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. மேலும் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும், புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்று பாரதியார் பல்கலைக் கழகம் அறிவிக்காத நிலையில், மூன்றாவது பருவம் மற்றும் நான்காவது பருவம் இந்தாண்டுக்குள் நிறைவடைமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியில் பல்கலைக்கழக நிர்வாகம் இப்படி விளையாட கூடாது என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: