ரயில்வே கேட்டிற்குள் புகுந்த கரடி... கேட் கீப்பரைத் தாக்க முயன்ற ‘பகீர்’ நிமிடம்: குன்னூர் பழைய அருவங்காடு ரயில் நிலையத்தில் பரபரப்பு !!!
பயணிகள் போடும் திண்பண்டங்களுக்கு ஆசைப்பட்டு வரும் வனவிலங்குகள்; அலட்சியம் தொடர்ந்தால் விபரீதம் என ஊழியர்கள் எச்சரிக்கை!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே பழைய அருவங்காடு ரயில் நிலையத்தில் புகுந்த கரடி அங்கிருந்த கேட்கீப்பரை தாக்குவது போல் சென்று பின்னர் ஓடி புதருக்குள் மறைந்தது...
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை,கரடி, மான்,காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின்,புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் குன்னூர் அருகே பழைய அருவங்காடு ரயில் நிலையத்தில் புகுந்த கரடி அங்கு ரயில் வருகை காக,காத்திருந்த கேட் கீப்பரை தாக்குவது போல் சென்றது,
பின்னர் அங்கிருந்து ஒடி அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது,
ரயில் பயணிகள் திண் பண்டங்களை, தூக்கி எறிந்து செல்வதால் இவற்றை உண்பதற்காக கரடி வருவதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: