வெள்ளி, 17 ஜூலை, 2026

ஏர் ஹாரன் சோதனையின் போது செய்தியாளர்களை எஸ்.ஆர்.டி பேருந்து ஓட்டுநர் மிரட்டல் - கோவை பீளமேட்டில் பரபரப்பு!

SHARE

ஏர் ஹாரன் சோதனையின் போது செய்தியாளர்களை எஸ்.ஆர்.டி பேருந்து ஓட்டுநர் மிரட்டல் - கோவை பீளமேட்டில் பரபரப்பு!

சாலையில் சாமானியர்களிடம் இவர்களின் அத்துமீறல் எப்படி ? இருக்கும் எனப் பொதுமக்கள் கேள்வி ; மிரட்டல் விடுத்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தல் !

கோவை, பீளமேடு பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையின்போது, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை எஸ்.ஆர்.டி. பேருந்து ஓட்டுநர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் சிறப்பு சோதனை நடைபெற்றது.

அப்போது, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை, எஸ்.ஆர்.டி. பேருந்தின் ஓட்டுநர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையிலேயே இவ்வாறு நடந்துகொள்ளும் நபர்கள், சாலையில் பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளிடம் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏர் ஹாரன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஊடகவியலாளர்களை மிரட்டிய ஓட்டுநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: