மாங்காய் பறித்து தருவதாக கூறி கோவை அருகே 3 வயது சிறுமியை பாலியல் கொடுமை - 15 வயது சிறுவனிடம் காவல்துறை விசாரணை !!!
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள, ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விவசாய வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 வயதில் மகள் உள்ளனர்.
விவசாய தம்பதியின் உறவினர் அப்பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 15 வயதில் சிறுவன் உள்ளான்.
சம்பவத்தன்று அந்த சிறுவன் வீட்டில், விளையாடிக் கொண்டு இருந்த விவசாய தம்பதியின் 3 வயது சிறுமியை மாங்காய் பறித்து தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளான்.
அங்கு வீட்டிற்குள் சென்றதும் சிறுவன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளான். இதனால் சிறுமி கதறி அழுது உள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது அந்த வீட்டிற்கு வெளியே சிறுமியின் சகோதரன் மற்ற நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே இருந்தான். வீட்டுககுள் தனது சகோதரியின் அழுகை சத்தம் கேட்டதால், அதிர்ச்சி அடைந்த அவன் உள்ளே சென்று உள்ளான்.
அதற்குள் , சிறுமியை டி.வி பார்க்க கூறிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் ஒன்றும் தெரியாதது போல் படுக்கையில் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டு இருந்து உள்ளான். அவனிடம், சிறுமியின் சகோதரன் எதற்காக தங்கை அழுது கொண்டு இருந்தாள் என்று கேட்டு உள்ளான்.
அதற்கு அந்த சிறுவன் ஒரு காரணத்தை கூறி சமாளித்து உள்ளான். அதன் பிறகு சிறுமியை அழைத்துக் கொண்டு, சகோதரன் தனது வீட்டிற்கு திரும்பி விட்டான். அப்போது சிறுமி உறவினர் வீட்டில் நடந்த சம்பவத்தை அழுது கொண்டே, தாயாரிடம் கூறினாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், நடந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோரிடம் நியாயம் கேட்டு உள்ளனர்.
அப்போது அவர்கள் உறவினர்கள் , என்பதாலும் சிறுமியின் எதிர்காலம் கருதியும் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து அமைதியாக இருந்து உள்ளனர். இதற்கு இடையே இந்த சம்பவம் நடந்து 1 மாதம் ஆகிய நிலையில் தகவல் ஊராருக்கு தெரிய வந்து உள்ளது.
அதன் பிறகு நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீசார் 15 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துகள்: