திங்கள், 10 ஆகஸ்ட், 2026

கோவையில் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடமாநிலத் தொழிலாளி கைது ; 6 அடி உயர கஞ்சா செடி பறிமுதல் - போலீசார் அதிரடி !!!

SHARE

 கோவையில் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வடமாநிலத் தொழிலாளி கைது ; 6 அடி உயர கஞ்சா செடி பறிமுதல் - போலீசார் அதிரடி !!!

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டில் 6 அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில், மாவட்ட எல்லைகளில் சோதனச்சாவடிகள் அமைக்கப்பட்டுச் சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸார் கஞ்சம்பட்டி பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பணி புரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அல்மோ கீர் மோலா என்பவரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தினர்.

 விசாரணையில், அவர் தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் இருந்து கஞ்சா விதைகளைக் கொண்டு வந்து, அவர் தங்கி இருந்த வீட்டின் அருகில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது.

இதை அடுத்து, அந்த வடமாநிலத் தொழிலாளி குடியிருந்து வந்த காசிப்பட்டணம் பகுதிக்குச் சென்று போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சுமார் 6 அடி உயரத்தில் செழிப்பாக வளர்ந்திருந்த கஞ்சா செடியைப் போலீஸார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அல்மோ கீர் மோலாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: