திங்கள், 10 ஆகஸ்ட், 2026

ஜிபே-வில் பணம் அனுப்புவதாகக் கூறி பணம் மோசடி ; கடையில் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியீடு - கோவையில் தொடரும் ஆன்லைன் ஏமாற்று வேலைகளால் வியாபாரிகள் அதிர்ச்சி !!!

SHARE

 ஜிபே-வில் பணம் அனுப்புவதாகக் கூறி பணம் மோசடி ; கடையில் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியீடு - கோவையில் தொடரும் ஆன்லைன் ஏமாற்று வேலைகளால் வியாபாரிகள் அதிர்ச்சி !!!

 கோவையில் வணிகர்களை இலக்காகக் கொண்டு போலி ஜிபே செயலிகள் மூலம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் மேலும் ஒரு கடை ஊழியரை ஏமாற்றி பணம் சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வரும் செல்போன் உதிரிபாகங்கள் கடைக்கு நேற்று வாலிபர் ஒருவர் வந்து உள்ளார். அவர் தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, கடையில் இருந்த ஊழியரிடம் ரூ.800 ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு, அதனைச் சாமர்த்தியமாகக் கடையின் ஜிபே கணக்கிற்கு அனுப்பிவிடுவதாகத் தெரிவித்து உள்ளார்.

​தொடர்ந்து, தனது செல்போனில் ஜிபே மூலம் ரூ.800 வெற்றி கரமாக அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறிப் போலியான திரைச் சான்றை கடை ஊழியரிடம் காண்பித்து உள்ளார். அதனை உண்மையென நம்பிய ஊழியரும் பணத்தைக் கொடுத்து உள்ளார். அந்த வாலிபர் சென்ற பிறகு கடையின் வங்கி கணக்கைச் சரிபார்த்த போது, பணம் வரவு வைக்கப்படவில்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் ஊழியருக்குத் தெரியவந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாகச் சுந்தராபுரம் பகுதியில் உள்ள துணிக்கடையிலும் இதேபோன்று போலியான ஜிபே செயலியைப் பயன்படுத்தி ரூ.2,150 மோசடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 தற்போது காந்திபுரத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்து உள்ளதால் கோவை வணிகர்கள் இடையே பெரும் அச்சமும், அதிர்ச்சியும் நிலவி வருகிறது.

​ஜிபே, போன்பே போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது வாடிக்கையாளர்கள் காண்பிக்கும் ஸ்கிரீன்ஷாட்களை மட்டும் நம்ப வேண்டாம்.

​உங்கள் சொந்த போனில் வங்கி பயன்பாட்டுச் செயலி அல்லது QR சவுண்ட் பாக்ஸ் (Sound Box) மூலம் பணம் வந்து விட்டதா ?  என்பதைச் மெசேஜ் மூலம் உறுதி செய்த பின்னரே பொருட்களை அல்லது ரொக்கப் பணத்தைக் கொடுக்க வேண்டும்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: