சனி, 1 ஆகஸ்ட், 2026

காலில் சிக்கிய டயரை உதைத்து ‘ஃபுட்பால்’ விளையாடிய காட்டு யானை... கோத்தகிரியில் சி.சி.டி.வி யில் பதிவான சுவாரசிய வீடியோ வைரல் !!!

SHARE

 காலில் சிக்கிய டயரை உதைத்து ‘ஃபுட்பால்’ விளையாடிய காட்டு யானை... கோத்தகிரியில் சி.சி.டி.வி யில் பதிவான சுவாரசிய வீடியோ வைரல் !!!

பலாப்பழ சீசனால் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்ட யானை !

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடி வந்த காட்டு யானை ஒன்று, தனது காலில் சிக்கிய டயரை அப்புறப்படுத்திவிட்டு அதனைப் பலமுறை உதைத்துச் செல்லமாக கால்பந்து விளையாடிய சுவாரசியமான வீடியோ வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சபானை மற்றும் அதன் சுற்றவட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் களைகட்டி உள்ளது. மரங்களில் பலாப் பழங்கள் கொத்துக் கொத்தாய்க் காய்த்துக் குலுங்குவதால், அதனைச் சுவைத்து உண்பதற்காகச் ஏராளமான காட்டு யானைகள் மலைப் பகுதிக்கு வந்து தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. அவ்வாறு வரும் யானைகளில் சில, வழிதவறி கிராமக் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் நுழைவது வாடிக்கையாகி உள்ளது.

இந்த நிலையில், கோத்தகிரி அருகே உள்ள பர்ன்சைடு பகுதியில் அமைந்து உள்ள தேயிலைத் தோட்டத்தின் நடுவே உள்ள மண் சாலையில், நள்ளிரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று உணவு தேடி மெதுவாக நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றின் டயர், அந்த யானையின் பின்னங்காலில் மாட்டிக் கொண்டது.

​தனது காலில் ஏதோ சிக்கியதை உணர்ந்த யானை, காலை உதறி, உதறி டயரை அகற்றுவதற்குத் தீவிர முயற்சி செய்தது. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு காலில் இருந்த டயர் கழன்று தார்ச்சாலையில் விழுந்தது. உடனடியாகத் திரும்பிப் பார்த்த அந்த காட்டு யானை, கோபப்படாமல் தனது கால்களாலும் தும்பிக்கையாலும் அந்த டயரை உதைத்து தள்ளியும், உருட்டியும் செல்லமாக விளையாட்டு காட்டியது.

யானை மிகவும் உற்சாகமாக டயரை உதைத்து விளையாடிய இந்த அபூர்வ மற்றும் வேடிக்கையான காட்சிகள், அப்பகுதியில் உள்ள வீட்டின் சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

​அதேவேளையில், பலாப்பழ சீசன் என்பதால் கிராமப் பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: