லூலூ மாலில் அதிர்ச்சி ; அடுத்தவரின் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற ஜோடி - வைரலாகும் சி.சி.டி.வி காட்சிகள் !!!
பார்க்கிங்கில் சுற்றும் திருட்டுக் கும்பல் : பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் கவலை !!!
கோவை லூலூ மாலில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த விலை உயர்ந்த ஹெல்மெட்டை இளைஞர் மற்றும் இளம்பெண் இணைந்து திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை லக்ஷ்மி மில் சந்திப்பு அருகே உள்ள பிரபல லூலூ மாலுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள இருசக்கர வாகனப் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு உயர்தர பைக் ஒன்றில், அதன் உரிமையாளர் விலை உயர்ந்த ஹெல்மெட்டை பூட்டாமல் வைத்து விட்டுச் சென்று உள்ளார்.
இந்நிலையில், அங்கு சாதாரணமாக உலா வந்த வாலிபரும் அவருடன் வந்த இளம்பெண்ணும் பார்க்கிங் பகுதியில் யாரும் கவனிக்காத நேரமாகப் பார்த்து, அந்தப் பைக்கில் இருந்த விலை உயர்ந்த ஹெல்மெட்டை நைஸாக எடுத்துக் கொண்டு அங்கு இருந்து நழுவிச் சென்று உள்ளனர்.
பின்னர் பைக் உரிமையாளர் வந்து பார்த்த போது ஹெல்மெட் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மால் பாதுகாப்பு ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சி.சி.டி.வி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அந்த ஜோடி ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காட்சி தெளிவாகப் பதிவாகி இருந்தது அம்பலமானது.
தற்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் மிக வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ பதிவைப் பார்த்துப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
"பாதுகாப்பான இடம் என நம்பி மால்களுக்கு வரும் இடங்களில் கூட இப்படி ஹெல்மெட் திருட்டு போவது கவலை அளிக்கிறது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: