பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." சுத்தியலால் கொடூரமாகத் தாக்கிச் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள் !!!
கிணத்துக்கடவு வாலிபர் படுகொலை சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோக்கள் !!!
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே வாலிபரைக் கொடூரமாகக் கொலை செய்த கொலையாளிகள், "பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." என்று கூறி சுத்தியலால் தாக்கும் அதிர்ச்சி வீடியோவைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபர், நேற்று நள்ளிரவு தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துக் கிணத்துக்கடவு போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் மது அருந்தும் பழக்கம் தொடர்பான முன் விரோதத்தில், அஸ்வின் தூங்கிக் கொண்டு இருந்த போது வீட்டிற்குள் புகுந்து அரிவாள் மற்றும் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், அஸ்வினைத் தாக்கும் போது கொலையாளிகள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளனர். அதில், அஸ்வினைச் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கியபடி, "பங்காளி கிட்ட எல்லாம் சொல்லி வச்சுக்கோ..." என்று மிரட்டல் தொனியில் பேசி, அந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இந்தக் கொடூர வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாகப் பரவி வருவதுடன், பொதுமக்கள் இடையே மிகுந்த பீதியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுப் போலிசாருக்குச் சவால் விடும் வகையில் நடந்து கொண்ட கொலையாளிகளான மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைக் கைது செய்யக் கிணத்துக்கடவு போலிசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்: