செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

"காட்டில் ஆனந்தமாக உறங்கும் யானை" - ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகுவின் நெகிழ்ச்சியான சுதந்திர தின வீடியோ வைரல்!

SHARE

 "காட்டில் ஆனந்தமாக உறங்கும் யானை" - ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகுவின் நெகிழ்ச்சியான சுதந்திர தின வீடியோ வைரல்!

சுதந்திரம் என்பது இது தான்: 80-வது சுதந்திர தினத்தில் வன ஆர்வலர்களைக் கவர்ந்த சுவாரஸ்யப் பதிவு!

 முன்னாள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், தற்போதைய சென்னைத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) ஆணையருமான சுப்ரியா சாகு (IAS) சமூக வலைதளம் பக்கத்தில் பகிர்ந்த 80-வது சுதந்திர தின வீடியோ இணையத்தில் வைரலாகி வன ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சுப்ரியா சாகு இணையதள பக்கத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அடர்ந்த வனப்பகுதியில் யானை ஒன்று எந்தவொரு பயமும் இன்றி, தன் சொந்த வீட்டில் இருப்பது போல மிக ஆனந்தமாக உறங்கிக் கொண்டு இருக்கும் காட்சிகளும், மரங்கள் காற்றில் அசைந்தாடும் அழகிய சூழலும் இடம்பெற்று உள்ளன.

​தனு பரண் (Dhanu Paran) என்பவரால் படமாக்கப்பட்ட இந்த அற்புதமான காணொலியைப் பகிர்ந்து சுப்ரியா சாகு அதில் பதிவு செய்து உள்ளது:

"சுதந்திரம் என்பது இப்படித் தான் இருக்கும், காட்டில் ஒரு யானை ஆனந்தமாக உறங்குகிறது, மரங்கள் காற்றில் நடனமாடுகின்றன. வனம் சுதந்திரமாகக் கனவு காணக்கூடிய பூமியாக நாம் எப்போதும் இருப்போமாக. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், இந்தியா!"

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம், சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், WWF இந்தியா, மற்றும் இந்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் போன்ற அமைப்புகளைக் குறிப்பிட்டு அவர் பதிவிட்ட இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுத் தீயாகப் பரவி வருகிறது.

​இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதே உண்மையான சுதந்திரம் என்ற உயரிய சிந்தனையை உணர்த்தும் வகையில் அமைந்த இந்த வீடியோ, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: