டெங்கு கொசு மருந்துப் புகையால் மூச்சுத்திணறி இருவர் கொடூர பலி ; கோவை, அன்னூரில் பெரும் பயங்கரம் - "அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரைப் பறித்த நச்சுப் புகை" !!!
கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தி சாலை பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் ராணி இவர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் நிலையில், இவர்கள் வசிக்கக் கூடிய பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடித்ததாக கூறப்படுகிறது.
கொசு மருந்து அடிக்க வந்த பேரூராட்சி ஊழியர்கள் குடியிருப்புகளுக்குள் அதிக புகை வரும் வகையில் கொசு மருந்துகளை அடித்ததாக தெரிகிறது. அப்பொழுது வீட்டில் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் ராணி ஆகிய இரண்டு பேர் அதனை சுவாசித்ததில் சுவாச கோளாறு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் அவர்களை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக் கூடிய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் இதனை சரியாக கண்காணிக்க தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழந்து உள்ளது
கொசு மருந்து தெளிக்கும் போது சுகாதாரத்துறை அதிகாரிகள் அருகில் இருந்தே எவ்வளவு மருந்துகள் அதில் உட்படுத்த வேண்டும் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அதனை கையாள தவறியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள் அது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்

0 கருத்துகள்: