சனி, 17 அக்டோபர், 2026

தேனிசைத் தென்றல் தேவா காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி!

SHARE

 இசையமைப்பாளர் தேவா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

தேனிசைத் தென்றல் தேவாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை சூர்யா மருத்துவமனையில் இன்று காலை சுமார் 8.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் தேவா (75) இன்று மாரடைப்பால் காலமானார். கானா பாடல்களை தமிழ் சினிமாற்கு அறிமுகப்படுத்திய புகழ் பெற்றவர். தேனிசை தென்றல் தேவா என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளர் தேவா கடைசியாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சாருகேசி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

இசை அமைப்பாளர் தேவா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். ரஜினிகாந்தை மிகப்பெரும் கமர்ஷியல் நாயகனாக நிலைநிறுத்திய அண்ணாமலை, பாட்ஷா ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் தேவா.

மேலும், ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்டுக்கு இன்று வரை தேவாவின் பின்னணி இசை தான் ஒலித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் வெளியான, ஜெயிலர் 2 படத்திலும் ரஜினிகாந்த் டைட்டில் கார்டில் தேவாவின் இசை ஒலித்தது. இது அவரின் தனிச்சிறப்பாக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் ஆகிய படங்களுக்கு இசை அமைத்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரகளான விஜய் நடித்த குஷி, நேருக்கு நேர், அஜித் நடித்த ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, முகவரி, சிட்டிசன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். அஜித்குமாரை அவரது திரை வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் தனது வித்தியாசமான இசையமைப்பின் மூலம் தேவா மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார்.

இசையமைப்பாளர் தேவா அஜித் நடித்த முதல் ஆசை திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் மாநில விருதை வென்றார். அதனைத் தொடர்ந்து கன்னட மொழியில் வெளியான அம்ருத வரிஷின் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.

தமிழ் சினிமாவில் தேவாவின் பங்களிப்பை போற்றும் வகையில் கடந்த 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆஸ்திரேயா நாட்டில் நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கையில் அவரை அமர வைத்து, தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய சின்னமான செங்கோல் கொடுத்துக் கெளரவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: