புதன், 4 நவம்பர், 2026

ரூ. 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்" - கோவை டவுன்ஹால் நகைக் கடைகளில் பி.ஐ.எஸ் (BIS) அதிகாரிகள் அதிரடி சோதனை!

SHARE

6 இலக்க HUID ஹால்மார்க் முத்திரை இன்றி தங்கம் விற்பனை: பிக் பஜார் தெருவில் 4 கடைகளில் பாய்ந்த நடவடிக்கை!

 கோவையின் முக்கிய வணிகப் பகுதியான டவுன்ஹால் பகுதியில் உள்ள 4 பிரபல நகைக் கடைகளில் இந்திய தர நிர்ணய அமைப்பின் (Bureau of Indian Standards - BIS) அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், HUID ஹால்மார்க் முத்திரையின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 3 கோடி மதிப்பிலான 2.085 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை, ரேஸ்கோர்ஸில் இயங்கி வரும் பி.ஐ.எஸ் கிளை அலுவலக அதிகாரிகள், இன்று (04.11.2026) டவுன்ஹால் பிக் பஜார் தெரு மற்றும் அதன் சுற்றி உள்ள நகைக் கடைகளில் திடீர் தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அரசு விதிகளுக்குப் புறம்பாக HUID (Hallmark Unique Identification) எண் இல்லாத தங்க நகைகளை விற்பனைக்கு வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரிய கடை வீதியில் உள்ள KRT JEWELLERS  

ANUBHAV JEWELLERS, SREE VASAVI CHAINS, பவளம் தெரு (ராஜா ஹால் அருகில்) KK CHAINS & JEWELS ஆகிய நகைக் கடைகளில்

மத்திய அரசு உத்தரவின்படி, கடந்த 31 மார்ச் 2023-க்குப் பிறகு 6 இலக்க HUID ஹால்மார்க் தனித்துவ எண் இல்லாத எந்தவொரு தங்க நகையையும் விற்பனை செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 2.085 கிலோ எடை உள்ள தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச/சந்தை மதிப்பு சுமார் ரூ. 3 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பி.ஐ.எஸ் சட்டம் 2016-ன் படி, HUID இன்றி நகைகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு,

1 ஆண்டு வரை சிறை தண்டனை, அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதம், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் 5 மடங்கு வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் தங்க நகைகளில் 6 இலக்க HUID எண் மற்றும் BIS முத்திரை உள்ளதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும். டவுன்ஹால் பகுதிகளில் சமீபத்தில் நகை வாங்கியவர்கள், தங்களின் பில்லில் HUID எண் குறிப்பிடப்பட்டு உள்ளதா ? என்பதைச் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HUID முத்திரை இன்றி நகைகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள BIS அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். BIS Care App மூலம் புகாரைப் பதிவு செய்யலாம். hcbo@bis.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: