சனி, 30 மே, 2026

மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்த தயாராகும் விவசாயிகள் !!!

SHARE

 மேகதாது அணைக்கு எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் நடத்த தயாராகும் விவசாயிகள் !!!

மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை சட்ட விரோதம் என மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கர்நாடகா அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை சட்ட விரோதம் என மத்திய அரசு நிராகரிக்க வேண்டும், மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து காவிரி மேலாண்மை ஆணையம் பெற்று தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கர்நாடகா அரசை கண்டித்தும் வாகன பேரணியாக சென்று மேகதாதுவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தது.

அதன்படி, இன்று (மே 30) தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் தஞ்சாவூர் ராஜராஜசோழன் சிலை முன்பு திரண்டனர். பின்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை அடுத்து கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தொடர்ந்து, தஞ்சையில் இருந்து வாகன பேரணியாக விவசாயிகள் புறப்பட்டனர். இவர்கள் நாளை காலை ஜூஜூவாடி வழியாக கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைந்து மேகதாது பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய 

தமிழக காவேரி விவசாயி சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “உச்ச நீதிமன்றத்திற்கு சமமான அமைப்பாக காவேரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007-இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் கீழ் பாசன விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் எந்தவொரு அணையும் கட்டமுடியாது என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மேகதாது அணை அமைக்கப்படும் என்றும், அதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரித்து விரைவில் பூமி பூஜை போட உள்ளதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பது சட்ட விரோதமாகும்.

இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடங்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க வும் இணைந்து சட்டவிரோதமாக கர்நாடகாவில் அணை கட்ட நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அப்படி அவர்கள் அணை கட்ட அனுமதி கொடுத்தால், தமிழ்நாடு சுடுக்காடாக ஆகிவிடும். குடிநீர் ஆதாரம் பறிபோகும், 25 ஏக்கர் நிலம் பாலைவனமாக மாறும், விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் அகதிகளாக வெளியேறக் கூடிய பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது” என வேதனையுடம் பேசினார்.

மேலும், “இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும், அனுமதியை திரும்ப பெற வேண்டும், வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து, “தி.மு.க ஆட்சியில் முறையாக நடவடிக்கை எடுக்காத விளைவுதான், இன்று வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசு முன்வந்து உள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக கவேரி குறித்து வாய் திறக்காததால், மேகதாது அணை குறித்து பேசாததால் தான் இந்த நிலைமை.

தற்போதையை முதலமைச்சர் விஜய் அரசு, இதனை அனுமதிக்கக் கூடாது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசரக்கால வழக்கு தொடர வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: