செவ்வாய், 23 ஜூன், 2026

அம்மோனியா கசிவு - உயிரிழந்தவர்களை அடையாளம் காண பெண் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற போலீஸ் !!!

SHARE

 அம்மோனியா கசிவு - உயிரிழந்தவர்களை அடையாளம் காண பெண் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற போலீஸ் !!!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயுக் கசிவால் உயிரிந்தவர்களை அடையாளம் காண்பதற்கு, முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் தொழிற் சாலையில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட விபத்தில் 77 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில், 7 பேர் உயிரிழந்து விட்டனர். 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். 68 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இதுவரை உயிரிழந்த 7 பேரில், 6 பேர் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து உள்ளது.

இதற்கு இடையே, தொழிற்சாலையில் பணி புரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை ஒடிசா மாநில அதிகாரிகள் குழு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டு அறிந்தனர்.

இதன் இடையே சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில், உயிரிழந்த பெண் தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்காக 8 பெண் தொழிலாளர்களை காவல் துறையினர் தங்களது வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: