திங்கள், 6 ஜூலை, 2026

குன்னூர் அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் !!!

SHARE

 குன்னூர் அருகே 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் !!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே 20 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர், மூன்று நாட்களுக்கு முன் நீலகிரி மாவட்டத்திற்கு வேனில் சுற்றுலா சென்றனர். பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று அவர்கள் பார்வையிட்டனர். தங்களது சுற்றுலாப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை அவர்கள் சென்னைக்கு வேனில் புறப்பட்டனர்.

குன்னூர் அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் வந்து கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால், வேனில் இருந்தவர்கள் அலறி துடித்து கூச்சலிட்டதால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள், விபத்து குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் வந்த 24 பேரில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து குன்னூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: