சனி, 11 ஜூலை, 2026

ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகளை சென்ற வனத்துறை வாகனத்தை துரத்திய ஒற்றைக் காட்டு யானை சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ !!!

SHARE

 ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகளை சென்ற வனத்துறை வாகனத்தை துரத்திய ஒற்றைக் காட்டு யானை சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ !!!

 ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனசரகம் கொண்டதாகும் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் கலீம் சின்னத்தம்பி அரிசி ராஜா என்கிற முத்து உட்பட 26 யானைகள் மற்றும் இரண்டு குட்டிகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது டாப்ஸ்லிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை வாகனத்தில் யானைகள் வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் செல்கின்றனர் போகும் வழியில் காட்டு யானைகள் மான்கள் காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.

 இந்நிலையில் வனத்துறையினர் வாகனம் அடர் வனப்பகுதிக்குள் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக ஒற்றைக் காட்டு யானை வனத்துறை வாகனத்தை துரத்தியது இதில் அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் தப்பினர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: