ஞாயிறு, 5 ஜூலை, 2026

நிர்வாணமாகக் கிடந்த சடலம்” ; செல்போன் பேசியதால் ஏற்பட்ட சந்தேகம் - கோவையில் பெண் கொலை வழக்கில் ஒடிசாவில் பதுங்கி இருந்த கணவர் கைது !!!

SHARE

  நிர்வாணமாகக் கிடந்த சடலம்”, செல்போன் பேசியதால் ஏற்பட்ட சந்தேகம் ; கோவையில் பெண் கொலை வழக்கில் ஒடிசாவில் பதுங்கி இருந்த கணவர் கைது - அதிர்ச்சி வாக்குமூலம் !!!

​“சந்தேக மரணம் கொடூரக் கொலை வழக்காக மாற்றம்”: குடும்பத் தகராறில் கழுத்தை நெரித்துக் கொன்றதாக  கணவன் ; கோவையில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

​ "கோவை, மதுக்கரை அருகே கடந்த ஜூன் 24-ம் தேதி இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பரபரப்புச் சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது வடமாநிலக் கணவரைத் தனிப்படை போலீஸ் ஒடிசா மாநிலத்திற்கே சென்று கைது செய்து உள்ளது. 'மனைவி அடிக்கடி செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சந்தேகத்தில் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்' என அந்த நபர் வாக்குமூலம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

​கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில், கடந்த ஜூன் 24-ம் தேதி அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் துணியின்றி நிர்வாண நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்து உள்ளார். சடலத்தை மீட்ட  போலீஸார், ஆரம்பத்தில் இதனை ஒரு சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து, கோணங்களில் தங்களது விசாரணையைத் தொடங்கினர்.

 விசாரணையின் போது, உயிரிழந்த வடமாநிலப் பெண்ணின் கணவரான ஜெகனபிரதான் (வயது 23) என்ற வாலிபர், மனைவியின் மரணத்திற்குப் பிறகு ஊரை விட்டு ஓடி, தலைமறைவாக இருந்தது போலீஸ் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

​தலைமறைவான குற்றவாளியை வளைத்துப் பிடிக்கக் கோவை மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், துரிதமாகச் செயல்படும் தனிப்படை அமைக்கப்பட்டது.

 இந்தத் தனிப்படை போலீஸ் கேரளா, ஆந்திரா எனப் பல்வேறு மாநிலங்களுக்குப் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

 இறுதியில், குற்றவாளி ஜெகனபிரதான் தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் ஒரு பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், அவனை கைது செய்து, கோவைக்குக் கொண்டு வந்து  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

​கைது செய்யப்பட்ட ஜெகனபிரதானிடம் போலீஸார்  நடத்திய விசாரணையில்,  "தனது மனைவி 24 மணி நேரமும் செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசி வந்தார். இது அவருக்குள் சந்தேகத்தையும், கோபத்தையும் கிளப்பியது. இதனால் அவர்களுக்குள் தினசரி கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அவர், அவரது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

​இதனைத் தொடர்ந்து, போலீஸார் இந்தச் சந்தேக மரண வழக்கை, தற்பொழுது கொடூரக் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். குற்றவாளி ஜெகனபிரதானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்தியச் சிறை  அடைத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: