செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

வேலை தேடி கோவை வந்த சென்னை வாலிபர் விடுதியில் அடித்துக் கொலை ; உடன் தங்கி இருந்த நண்பர்களுக்கும் படுகாயம் - விடுதிக்குள் புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் கொடூரத் தாக்குதல் !!!

SHARE

 வேலை தேடி கோவை வந்த சென்னை வாலிபர் விடுதியில் அடித்துக் கொலை ; உடன் தங்கி இருந்த நண்பர்களுக்கும் படுகாயம் - விடுதிக்குள் புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் கொடூரத் தாக்குதல் !!!

 சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேலை தேடி வந்த நிலையில், நேற்றிரவு விடுதிக்குள் புகுந்த மர்மக் கும்பலால் அடித்துக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் கோவைக்கு வேலை தேடி வந்து உள்ளார். இதற்காகக் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கி வேலை தேடி வந்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு நவீன் தங்கி இருந்த அறைக்குள் திடீரென நுழைந்த 7 முதல் 8 பேர் கொண்ட மர்மக் கும்பல், நவீனை சரமாரியாகத் தாக்கி உள்ளது. இதனைத் தடுக்க முயன்ற நவீனுடன் ஒரே அறையில் தங்கி இருந்த மற்ற வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

 இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு காவல் நிலையப் போலீசார், நவீனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன ?

சென்னை வாலிபர் நவீன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் ? முன்விரோதம் காரணமா ? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா ? என்பது குறித்துப் பீளமேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பியோடிய 8 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, விடுதி மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: