கஸ்டடி நிறைய டெத் ஆகி வருகிறது....; இரவில் திருடனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல மாட்டோம்- போலீசார்ருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் !!!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு தாலுகாவில் உள்ள அரசம்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.இதனை அடுத்து அப்பகுதி மக்கள் திருடனை பிடித்து காட்டி வைத்துள்ளார்கள் மேலும் இதுகுறித்து இரவு நேரத்தில் கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட திருடனை இரவு நேரத்தில் அழைத்துச் செல்ல மாட்டோம் காலை தான் அழைத்துச் செல்வோம் என கூறியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விடியும் வரை திருடனுக்கு பொதுமக்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் பொதுமக்கள் தான் பொறுப்பு எனவும் கூறியதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து இரவு முழுக்க காவல் இருந்த பொதுமக்கள் விடிந்த பின்பு வந்த கிணத்துக்கடவு காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காவல்துறையிடம் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி கஸ்டடியில் இப்போதெல்லாம் அதிக அளவு டெத் நடக்கிறது.அதனால்தான் திருடனை அழைத்துச் செல்லவில்லை என பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
இந்த செயல்பாடு பொதுமக்களிடையே ஆத்திரத்தையும் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

0 கருத்துகள்: