“ஹாய்யாக ஜாலியா படுத்துகிட்டு...” - நடுரோட்டில் படுத்துச் செல்ஃபி எடுத்த போதை ஆசாமி ; வைரலாகும் பெண்மணியின் காமெடியான கமெண்டரி வீடியோ !!!
வாகனங்களை மறித்துப் போதை ஆசாமியின் அட்ராசிட்டி : பொதுமக்கள் உயிரைப் பணயம் வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை !!!
நடுரோட்டில் படுத்துக் கொண்டு போதையில் செல்ஃபி எடுத்த நபரைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற வாகனம் விலகிச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிச் சிரிப்பலையையும், அதே நேரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போதையில் தலைக்கேறிய நபர் ஒருவர், போக்குவரத்து நடமாட்டம் உள்ள பிரதான சாலையில் நடுவே ஜாலியாகச் படுத்துக் கொண்டு, தனது செல்போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்து உள்ளார். அந்த வழியே வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அவர் மீது மோதி விடக் கூடாது என்பதற்காகச் சாலையில் இருந்து கீழே இறங்கி விலகிச் சென்றன.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், தனது செல்போனில் இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்து உள்ளார். அதில் அவர் பேசும்போது,
"மேல எத்தனுமுங்கிறேன்... லூசு பயலே படுத்து கிட்டு செல்ஃபி போடுறான்... ஹாய்யாக ஜாலியா படுத்து கிட்டு..." என்று தனது தமிழில் நகைச் சுவையாகக் கமெண்ட் அடித்து உள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் லூப் (Loop) முறையில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் கோவையில் நடைபெற்றதாகச் சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில், இது எங்கு ? எப்போது ? நடைபெற்றது. போதையில் இதுபோன்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: