கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ஐ.டி நிறுவன ஊழியர் இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு திறந்து உள்ளே சென்று அவருக்கு பெரு அதிர்ச்சி காத்து இருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு உள்ள பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. மேலும் கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் ஆகியவை சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பக்கவாட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாததால், ஆத்திரத்தில் அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு சுவரில் ஆங்கிலத்தில் சாரி என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்று உள்ளார்.
இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: