சனி, 19 செப்டம்பர், 2026

கோவை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் கைவரிசை" ; பார்க்கிங்கில் பையில் இருந்த செல்போன் அபேஸ்: சிசிடிவி காட்சி வெளியீடு!

SHARE

ஆள் நடமாட்டம் நிறைந்த டவுன்ஹால் பாதையில் சாவகாசமாகத் திருடிய மர்ம நபர்: வியாபாரிகள் அதிர்ச்சி!

 கோவையில் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் கைப்பேசியை மர்ம நபர் ஒருவர் சாவகாசமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் செல்லும் நுழைவுவாயில் பாதையில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைந்து உள்ளது. அங்கு இருசக்கர வாகன நிறுத்தத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கு இருந்த பையில் செல்போனை வைத்திருந்து உள்ளார். 

​அப்போது, அப்பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர், யாரும் கவனிக்காத நேரத்தைப் பயன்படுத்தி மீண்டும் பின்னோக்கி வந்து உள்ளார். அங்கு இருசக்கர வாகன நிறுத்தத்தில் பையில் வைக்கப்பட்டு இருந்த ஊழியரின் செல்போனை நைஸாக எடுத்துக் கொண்டு அங்கு இருந்து தப்பியோடி உள்ளார்.

பணியை முடித்து விட்டு வந்த ஊழியர்கள் தங்களது செல்போனைக் காணாமல் அதிர்ச்சி அடைந்து, பல இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். எங்கும் கிடைக்காததால், அங்குப் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

​அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்ற நபர் ஒருவர், வாகன நிறுத்துமிடத்திற்குள் சாவகாசமாக நுழைந்து, பையில் இருந்த செல்போனைத் திருடிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

எப்போதும் மக்கள் நடமாட்டமும், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் சென்று வரும் பரபரப்பான இடத்திலும் கூட, எந்தவித அச்சமும் இன்றி அசால்ட்டாக உள்ளே புகுந்து மர்ம நபர் செல்போனைத் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: