புதன், 28 அக்டோபர், 2026

ஒரு யூனிட் ரூ.41.50 மின் கொள்முதல் டெண்டர் ரத்து - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி அறிவிப்பு!

SHARE

 வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 முதல் ரூ.41.50 வரையில் வாங்குவதற்கு வெளியிடப்பட்டு இருந்த டெண்டரை மின் வாரியம் ரத்து செய்து உள்ளது.

வெளிசந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பாக தமிழக மின் வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்," தமிழகத்தின் மின்சாரத் தேவைக்காக, 2026 நவம்பர் முதல் 2027 மே வரையிலான காலகட்டத்தில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான கோரிக்கை மற்றும் முன்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில், ஒவ்வொரு மாதத்துக்கும் 1,000 மெகாவாட் (MW) மின்சாரம் கோரப்பட்டு உள்ள நிலையில், குறிப்பிட்ட அளவு மின்சாரம் வெவ்வேறு விலைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் TN State Periphery என்ற பிரிவின் கீழ் இடம் பெற்று உள்ளன.

2026 நவம்பர் 1 ஆம் தேதி மாலை 6 மணி முதல் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மின்சாரம் பெறுவதற்காக 1,000 மெகாவாட் கோரப்பட்டு உள்ளது. இதில், 20 மெகாவாட் மின்சாரம் ரூ.35.0 என்ற விலையிலும், 357 மெகாவாட் மின்சாரம் ரூ.37.5 என்ற விலையிலும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

டிசம்பர் 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கோரப்பட்டு உள்ளது. இதில், 20 மெகாவாட், 20 மெகாவாட் மற்றும் 361 மெகாவாட் என மூன்று அளவுகளில் ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்று உள்ளன. இவற்றுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைகள் முறையே ரூ.35, ரூ.35 மற்றும் ரூ.41.5 என குறிப்பிடப்பட்டு உள்ளன

ஜனவரி 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கோரப்பட்டு உள்ளது. இதில், 20 மெகாவாட், 20 மெகாவாட் மற்றும் 361 மெகாவாட் என மூன்று ஒதுக்கீடுகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவற்றுக்கான விலைகள் முறையே ரூ.35.0, ரூ.35.0 மற்றும் ரூ.41.5 ஆகும்.

பிப்ரவரி 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கோரப்பட்டு உள்ளது. இதில், 20 மெகாவாட், 20 மெகாவாட் மற்றும் 357 மெகாவாட் என ஒதுக்கீடுகள் இடம்பெற்று உள்ளன. இவற்றுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைகள் முறையே ரூ.35, ரூ.35 மற்றும் ரூ.41.5 எனக் குறிப்பிடப்பட்டு உள்ளன

மார்ச் 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கோரப்பட்டு உள்ளது. இதில், 20 மெகாவாட், 20 மெகாவாட் மற்றும் 347 மெகாவாட் என மூன்று ஒதுக்கீடுகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவற்றுக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட விலைகள் முறையே ரூ.35, ரூ.35 மற்றும் ரூ.41.5 ஆகும்.

ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கோரப்பட்டு உள்ளது. இதில், 20 மெகாவாட், 20 மெகாவாட் மற்றும் 337 மெகாவாட் என ஒதுக்கீடுகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவற்றுக்கான விலைகள் முறையே ரூ.35, ரூ.35 மற்றும் ரூ.41.5 ஆகும்.

மே 1-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கோரப்பட்டு உள்ளது. இதில், 20 மெகாவாட், 20 மெகாவாட் மற்றும் 337 மெகாவாட் என மூன்று ஒதுக்கீடுகள் இடம்பெற்று உள்ளன. இவற்றுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைகள் முறையே ரூ.35, ரூ.35 மற்றும் ரூ.41.5 ஆகும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் இடையே, இதுகுறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்து உள்ள மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார்,

"ரூ.37 முதல் ரூ.41.5 வரை குறிப்பிடப்பட்டு உள்ள விலைகளில் மின்சாரம் கொள்முதல் செய்யப்போவதில்லை. இன்று நாங்கள் டெண்டரைத் திறந்து பார்த்த போது, பல நிறுவனங்கள் மிக அதிக விலைகளைக் குறிப்பிட்டு இருந்தன. அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான மின்சாரத்தைச் சமாளிக்கப் போதுமான மின்சாரம் நம்மிடம் உள்ளது. மேலும், அடுத்த கோடைக் காலத்திற்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்கூட்டியே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால், தற்போது நிறுவனங்கள் குறிப்பிட்டு உள்ள விலைகள் நியாயமற்றவையாக உள்ளன.

இதற்கு இடையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நடுத்தர மற்றும் நீண்டகால மின்சாரக் கொள்முதலுக்கான டெண்டர்களை வெளியிட உள்ளோம். எனவே, அதிக விலை கொடுத்து இனி எரிவாயு அடிப்படையிலான மின்சாரத்தைக் கொள்முதல் செய்யப்போவதில்லை. கீழே குறிப்பிடப்பட்டு உள்ள டெண்டரையும் ரத்து செய்யுமாறு ஏற்கெனவே உத்தரவிட்டு உள்ளேன்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: